டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழப்பு, காவிரி விவகாரம், நீட் தற்கொலைகள் உள்ளிட்ட பரபரப்பான சூழலில் சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து மோடியிடம் தமிழக ஆளுநர் விளக்கி கூறியிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் தமிழ்க் அரசியல் நிலவரம், சட்ட ஒழுங்கு நிலை குறித்து பிரதமரிடம் ஆளுநர் விளக்கம் அளித்து இருப்பது தெரிய வந்துள்ளது. நிர்மலாதேவி ஆடியோ விவகாரம் குறித்தும் ஆளுநர் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்ற ஆளுநர் புரோஹித் குடியரசு தலைவர் ராம்காந் கோவிந்தை நேற்று சந்தித்தார். மேலும் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவேத்கர் உள்ளிட்டோரை புரோஹித் சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…