Categories: இந்தியா

பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்னும் கல்யாணம் முடியல! சர்ச்சைகுரிய வகையில் பேசிய மத்திய பிரதேச மாநில கவர்னர் ஆனந்தி பென் பட்டேல்

Published by
Venu

மத்திய பிரதேச மாநில கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் ,பிரதமர் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடி பின்னர் பிரதமர் ஆனார். அவர், முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியதும் ஆனந்தி பென் பட்டேல் முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
Image result for மத்திய பிரதேச மாநில கவர்னர் ஆனந்தி பென் பட்டேல்
அவர், தற்போது மத்திய பிரதேச மாநில கவர்னராக இருந்து வருகிறார். அங்குள்ள கர்தா மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணம் செய்தார்.

திமாரி என்ற இடத்தில் அங்கன்வாடி நிகழ்ச்சி ஒன்றில் கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் கலந்து கொண்டு அங்கன்வாடி ஊழியர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் குறித்து புகழ்ந்து பேசிய ஆனந்தி பென் பட்டேல், நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று கூறினார்.

அவர், தனது பேச்சில் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் திருமணம் ஆகாதவர் என்றாலும் கூட பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரச்சனைகள் குறித்து நன்றாக அறிந்தவர்.

குழந்தைகள் பிறப்பதற்கு முன்பும், பிறந்த பிறகும் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் தெரிந்தவர் என்று குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி ஜசோதா பென் என்பவரை இளம் வயதில் திருமணம் செய்திருந்தார். ஆனால், திருமணமான குறுகிய காலத்திலேயே அவர்கள் பிரிந்து வாழ்ந்தனர்.

மோடி திருமணம் ஆகாதவர் என்றே முதலில் கருதப்பட்டது. 2014 பாராளுமன்ற தேர்தலின் போது கூட வேட்பு மனுவில் ஜசோதா பென் தனது மனைவி என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால், ஆனந்தி பென் பட்டேல் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசியவற்றை செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…

8 minutes ago

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

48 minutes ago

“ஹிந்தி தேசிய மொழி இல்லை…அஸ்வின் சொன்னது சரி தான்” – அண்ணாமலை!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…

1 hour ago

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

10 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

10 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

12 hours ago