பிரதமர் உடம்பில் விஷ ஊசி செலுத்தப்பட்டதா சர்ச்சையை கிளப்பும் சுப்ரமணிய சாமி ட்வீட் என்னடா நடக்குது இங்க

Default Image

எதிர்க்கட்சிகள் மக்களைவையில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது.

மக்களவையில் நடைபெற்ற கூட்ட தொடரில் ராகுல் காந்தி தனது உரையை தொடங்கி பேசி முடித்தவுடன் நேரடியாக பிரதமர் மோடியின் இருக்காய் அருகே சென்று அவரை கட்டிபிடித்தார்.இதை சற்றும் எதிர்பாராத மோடி ஒரு நொடி ஆச்சர்யத்தில் பார்த்து விட்டு பின்பு உரைக்காக ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு தன இருக்கைக்கு சென்ற ராகுல் காந்தி கண்சிமிட்டி ஆச்சர்யப்படுத்தினார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருது தெரிவித்துள்ள சுப்ரமணிய சுவாமி வழக்கம் போல ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பது, ராகுல் காந்தி தம்மை கட்டிப்பிடிக்க பிரதமர் அனுமதித்திருக்கக்கூடாது என்றும்,ரஷ்யர்கள் ,கொரியர்களும்  மற்றவர்கள் மீது விஷ ஊசியை செலுத்த இந்த முறையை கடைபிடிப்பார்கள் .அதனால் பிரதமர் மோடி வெகு விரைவாக மருத்துவமனை சென்று சுனந்தா புஷ்கர் கையில் இருந்தது போல தம் மீது ஏதாவது விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்யவேண்டும்  என சுபரமணிய சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது .

இதனிடையில் ,இந்த நடவடிக்கைக்கு மக்களவை தலை சுமித்ரா மகாஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற செயல் அவையின் மாண்பு மற்றும் ஒழுக்கத்தை கெடுப்பதாக உள்ளது என கூறினார். பிரதமர் பதவிக்கான மாண்பையும் அவை குறைத்து விட்டது எனவும் தெரிவித்தார்.

ஆனால், இந்த செயலுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும் ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்தி வரவேற்பு தெரிவித்து, மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது எனவும் கூறினார்.

Dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்