பிரதமருக்கு இப்போதுதான் அதிர்ச்சி வைத்தியம் – ராகுல் காந்தி…!!
ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பிற்கு, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பிரதமருக்கு இப்போதுதான் அதிர்ச்சி வைத்தியம் கிடைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
99 சதவீத பொருள்களை, 18 சதவீதம் மற்றும் அதற்கு குறைவான ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். இது குறித்து தனது டுவீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சியின்போது அதிகபட்சமாக 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பது என்றே முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால், பாஜக அரசு அதனை மாற்றி அதிகபட்சமாக 28 சதவீதம் என்று நிர்ணயித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, கிடைத்துள்ள அதிர்ச்சி வைத்தியத்தின் மூலம் தூக்கம் கலைந்துவிட்ட மோடி, 99 சதவீதப் பொருள்களை 18 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதாக அறிவித்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.