பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உலக அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்தது #GoBackModi ஹேஷ் டாக்…
இதேபோல் காவிரி வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.திமுகவின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வீட்டில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெருக்கள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புகொடி ஏற்றப்பட்டது. பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரித்து விருதுநகர், சிவகாசி பகுதிகளில் உள்ள திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சென்னையில் கருப்புக்கொடி போராட்டத்தில் பங்கேற்க உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, திருவெறும்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், நாகை, திருவாரூரில் உள்ள வீடுகள், பேருந்து நிலையம், அலுவலகங்களில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருச்சி திருவெறும்பூர் பர்மா காலனியில் உள்ள வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி வருகையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மட்டும் அல்லாமல் இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் ட்ரென்ட் ஆனது கோ பேக் மோடி (#GoBackModi).உலக அளவில் ட்விட்டரில் முதலிடம் மோடியின் வருகையை எதிர்ப்பு தெரிவித்து ஹேஷ் டாக்கை ட்ரெண்டாக்கினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…