ஐ.மு.கூ அரசு : பியூஷ் கோயல் விமர்சனம்..!
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் விநியோகிக்கப்பட்ட ஆயில் பத்திரங்களுக்கு, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான, தற்போதைய மத்திய அரசு, சர்வீஸ் செய்து கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார்.
தலைநகர் டெல்லியில், இந்திய வர்த்த தொழில் கூட்டமைப்பு நடத்திய மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், எண்ணெய் நிறுவனங்கள், மத்திய அரசுக்கு செலுத்தாத பில்களுக்காக((Bills)) நிதியை திரட்டும் பொருட்டு, ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான ஆயில் பத்திரங்களை பெற்றிருப்பதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார்.
மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, உரம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றிற்கான மானியங்களையும், மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய மத்திய விற்பனை வரிகளையும், முந்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செலுத்தவில்லை என்றும் கூறியிருக்கிறார்.