பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த் அஞ்சலி..!
அரசு முறை பயணமாக, கியூபா சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். 7 நாட்கள் அரசு முறை பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முதலில் கிரீஸ் நாட்டிற்கு சென்ற பின்னர், அங்கிருந்து லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சூரிநாமுக்கு சென்றிருந்தார். இதையடுத்து, கியூபாவுக்கு சென்ற அவர், சாண்டியாகோ டி கியூபாவில் உள்ள முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில், தமது மனைவி சவிதாவுடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், அங்கிருந்து கியூப தலைநகர் ஹவானாவுக்கு புறப்பட்டுச் சென்ற அவரை, அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர்.