பிஜேபி_யின் ABVP தலைவரின் திருட்டுத்தனம் அம்பலம்..!!
டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை தேர்தல் செப்டம்பரில் நடைபெற்றது. இதில் ஏபிவிபி சார்பில் போட்டியிட்டு வென்ற அங்கிவ் பசோயா போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மாணவர் அமைப்பு வலியுறுத்தியது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக கூறி டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ வகுப்பில் சேர்ந்துள்ளார். ஆனால், அவர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பெற்றதாக கூறப்பட்ட சான்றிதழ் போலியானது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தது. அவர் போலியான சான்றிதழ்தான் வழங்கினார் எனவும், அவர் 2013 முதல் 2016 வரையில் வேலூரில் இருந்ததற்கான தடயம் எதுவும் இல்லை எனவும் இணையதள ஊடங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி தலைவர் தமிழக பல்கலைக்கழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ் வங்கியது அம்பலமாகியுள்ளது. தமிழ்நாடு முதன்மை கல்வி செயலாளருக்கு திருவள்ளூர் பல்கலைக்கழக பதிவாளார் எழுதியுள்ள கடிதத்தில், அங்கிவ் பசோயா போலி சான்றிதழ் வங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய பல்கலைக்கழகத்திலோ, எங்களுடைய பல்கலைக்கழகம் கீழ் செயல்படும் கல்லூரிகளிலோ அங்கிவ் பசோயா படிக்கவில்லை, மொத்தத்தில் எங்களுடைய மாணவரே கிடையாது. அங்கிவ் பசோயா வழங்கியது போலியான சான்றிதழ். எங்களுடைய பல்கலைக்கழகம் வழங்கவில்லை. பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் அலுவலகத்தின் பதிவுகள் சரிபார்க்கப்பட்டு சான்றிதழ் உண்மையானதல்ல என்பது தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU