பிஜேபி சார்பில் களமிறங்கும் சினிமா பிரபலம்….

Default Image
நடிகர் மோகன்லால் கேரளாவில் தனது பெற்றோர் விஸ்வநாதன் – சாந்தகுமார் பெயரில் ‘விஸ்வசாந்தி பவுண்டேஷன்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் மோகன்லால். அப்போது அவரை கேரளா  மாநிலம் வயநாடில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு பிரதமர் சிறப்பு அழைப்பாளராக வரவேண்டுமென அழைத்ததாக கூறப்படுகிறது..

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், மிகச் சிறந்த மலையாள நடிகரான மோகன்லாலை சந்ததித்து பேசினேன். மனித நேயத்துடன் அவர் ஆற்றி வரும் சமூக பணிகள் பாராட்டுக்குரியவை என்னையே  வியக்க வைத்துள்ளன அவரின் சமூக பணி என புகழ்ந்து தள்ளியுள்ளார் பிரதமர் மோடி…

இதையடுத்து பாஜக சார்பாக வரும் 2019ம் ஆண்டு நடைபெறவிருக்கிற நாடளுமன்ற தேர்தலில், மோகன்லால் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.எனவே நடிகர் மோகன்லால் பல்வேறு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறிவருகின்றனர்..

DINASUVADU 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்