பா.ஜ.க.வுக்கு எதிராக கட்சிகளைத் திரட்டும் காங்கிரஸ்..!
உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து மகாராஷ்ட்டிராவிலும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மகாராஷ்ட்டிராவில் மாநில கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் ஆகியோர் முனைப்பு காட்டி வருகின்றனர்.
சிறிய கட்சி, பெரிய கட்சி என பேதமின்றி அனைத்து தரப்பினருடனும் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக ஸ்வாபிமானி ஷட்காரி சங்காதனா, பகுஜன் விகாஸ் ஆகாதி உள்ளிட்ட சிறுகட்சிகள் காங்கிரசுடன் கைகோர்க்க முன்வந்துள்ளன.