பா.ஜ.க-ஐக்கிய ஜனதா தளம் ஆரம்பித்தது தொகுதி பங்கீடு மோதல் ! உடைகிறதா கூட்டணி..!

Default Image
அனைத்து அரசியல் கட்சிகளும் 2019–ம் ஆண்டு நடக்கப்போகும் பாராளுமன்ற தேர்தலை மனதில்வைத்து பணிகளை தொடங்கிவிட்டன. பா.ஜ.க.வுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற பல கட்சிகள் முயற்சிகளை தொடங்கியிருக்கின்றன. பா.ஜ.க. தனது 4 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லும் முயற்சியில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இப்போது 4 பாராளுமன்ற தொகுதிகளிலும், 11 சட்டசபை தொகுதிகளிலும் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. பெரும்சரிவை சந்தித்துள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் பா.ஜ.க.,  40 தொகுதிகளில்  22 இடங்களிலும் வெற்றி பெற்றது,ஐக்கிய ஜனதா தளம்  தனியாக போட்டியிட்டு 2 இடங்களை வென்றது. இந்த நிலையில் பீகாரில்  கடந்த பாராளுமன்ற தேர்தலை  விட  2019 ஆம் ஆண்டு தேர்தலில்  குறைந்த இடங்களிலேயே பாரதீய ஜனதா போட்டியிடும் என சூசகமாக ஐக்கிய ஜனதா தளம்  தகவல் தெரிவித்து உள்ளது.
ஐக்கிய ஜனதாதள செய்தி தொடர்பாளர் அஜய் அலோக் கூறியதாவது:-
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) யின் முகமாக முதலமைச்சர் நிதீஷ் குமார் உள்ளார். தொகுதி பங்கீடு  தொடர்பாக கட்சியில் எந்த குழப்பமும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
நாங்கள் 25 இடங்களில் போட்டியிட்டு பாஜக 15 இடங்களில் போட்டியிட்டார்கள். தற்பொழுது எங்கள் அணியில் மேலும் பல கட்சிகள் சேர்ந்து உள்ளது. தொகுதி பங்கீடு குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் என கூறினார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்