பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு பிரதமர் சிறப்பு விருந்து..!
இந்த ஆண்டின், அவர்களது ஆலோசனை கூட்டம் அரியானா மாநிலம் சூரஜ்குண்டில் நேற்று முன்தினம் தொடங்கியது.
கூட்டத்துக்கு வந்திருந்த பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை தனது இல்லத்துக்கு விருந்துக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
அதை ஏற்று இரு அமைப்புகளையும் சேர்ந்த சுமார் 60 தலைவர்கள் நேற்று இரவு பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு வந்தனர்.
அவர்களுக்கு பிரதமர் விருந்து அளித்தார். பா. ஜனதா தலைவர் அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ். செயல் தலைவர் சுரேஷ் பையாஜி ஆகியோரும் கலந்து கொண்டனர்.