பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை: பாதிரியார்கள் சார்பில் முன் ஜாமின் கேட்டு மனு!
பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய பாதிரியார்கள் சோனி வர்கீஸ், ஜாப் மேத்யூஸ் சார்பில் முன் ஜாமின் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
முன்னதாக கேரளாவில் கோட்டயத்தில் பாலியல் குற்றச்சாட்டு கூறிய கன்னியாஸ்திரிக்கு எதிராக பிஷப்பும் போலீசில் புகார் செய்தார்.
இடமாற்றம் செய்ததால் பழிவாங்க பாலியல் புகார் கூறியதாக கன்னியாஸ்திரி மீது பாதிரியார் குற்றச்சாட்டினார். 2014 முதல் 4 ஆண்டுகள் பிஷப் பிரான்கோ பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் கேரளாவில் உள்ள கோட்டயம் அருகில் பாவ மன்னிப்பு கேட்கவந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் மிரட்டப்பட்டதாக வாக்குமூலம் கொடுத்தார்.
இந்நிலையில் தற்போது பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய பாதிரியார்கள் சோனி வர்கீஸ், ஜாப் மேத்யூஸ் சார்பில் முன் ஜாமின் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.