பார்வை மாற்றுத்திறனாளிகள் சுலபமாக ரூபாய் நோட்டுகளை கண்டறிய சிறப்பு கருவியை வடிவமைக்க ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், தினமும் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளை எளிதில் கண்டறிய சற்று மேலெழும்பிய வகையில் பணம் அச்சிடப்பட்டிருக்கும். இதனால் பார்வையற்றவர்கள் தங்களது கையில் உள்ள பணத்தின் மதிப்பை யாருடைய உதவியும் இன்றி தாங்களே அறிந்து கொள்கின்றனர்.
ஆனால் புதிதாக அச்சிடப்பட்டு நடைமுறையில் இருக்கும் நோட்டுகளை கண்டறிவதில் சற்று சிரமம் உள்ளதாக பார்வையற்ற மாற்று திறனாளிகள் புகார் கூறியுள்ளனர். அதிலும் புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண்பதில் சிரமம் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகள் சுலபமாக ரூபாய் நோட்டுகளை கண்டறிய சிறப்பு கருவியை வடிவமைக்க ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த 6 மாதங்களுக்குள் இது தொடர்பான விதிமுறைகளை வெளியிடவும், ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பார்வையற்றோர் தேசிய கூட்டமைப்பு கூறுகையில், சிறப்பு கருவி உருவாக்குவதை விட, ரூபாய் நோட்டுகளின் அளவுகளில் மாற்றம் செய்தாலே போதுமானது என தெரிவித்துள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…