பார்வையற்றவர்கள் பணத்தை எளிதில் அடையாளம் புதிய வழி ! ரிசர்வ் வங்கி தகவல்..!
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பணத்தாள்களை எளிதில் அடையாளம் காணுவது குறித்த மாற்று வழிகளை ஆய்வு செய்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பணத்தாள்களுக்கு இடையேயான மதிப்பை பகுத்தறிய சற்று மேலெழும்பிய வகையிலான அச்சு பயன்படுத்தப்படுகிறது.
புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் இரு பக்க ஓரத்திலும் 7 கோடுகள் இதற்காக உள்ளன. ஆனால், புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண்பதில் சிரமம் இருப்பதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பண மதிப்பை எளிதில் அடையாளம் காணத் தேவையான தொழில்நுட்ப இயங்குமுறையை அடுத்த 6 மாதத்தில் வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.