பாரத் பந்திற்கு நடுவே கால்பந்து விளையாடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நாடு முழுவது வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாரத் பந்த் நடைபெற்ற நிலையில்,இதற்கு நடுவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கால்பந்து விளையாடினார்கள்.
டெல்லி-ஹரியானா எல்லையில் 13வது நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்டங்களாக நடத்தியும், பலன் ஏதும் அளிக்கவில்லை. புதிய சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டம் ரத்து செய்யப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதையடுத்து, நேற்று பாரத் பந்த் என்ற பெயரில் நாடு முழுவதும் விவசாய அமைப்பினர் முழு அடைப்பு போராட்டங்கள் நடத்தினர். இதற்கு பலரும் ஆதரவும் தெரிவித்தனர். சில இடங்களில் ரயில் மறியல், சாலை மறியல் என பல்வேறு விதமாக அவர்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனிடையே மேற்கு வங்க மாநிலத்தில் , பாரத் பந்த் நடைபெற்றது.இந்த மாநிலத்தில் இடது சாரிகள் கட்சிகள் சார்பில் பாரத் பந்திற்கு ஆதரவாக வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதற்கு மத்தியில் இடது சாரி கட்சியினை சார்ந்தவர்கள் பாரத் பந்திற்கு நடுவே கால்பந்து விளையாடினார்கள். “மேற்கு வங்கத்தில், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவாக முழுமையான பந்த் உள்ளது” என்று மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுஜன் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,
February 8, 2025![IND vs ENG 2nd ODI cricket match](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-vs-ENG-2nd-ODI-cricket-match.webp)
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)