பாபர் மசூதி இடிப்பு தினம்: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில்,16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி, ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாகக் கூறி, 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி, இந்து அமைப்புகளால் இடிக்கப்பட்டது. இதனால் இந்து-முஸ்லீம் மக்களிடையே கலவரம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனால் ஆண்டுதோறும் டிசம்பர் 6-ம் தேதி, நாடு முழுவதும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU.COM
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024