பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!!
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளில் கடந்த சில மாதங்களில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. சோபியான் மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு ராணுவ வீரர் மற்றும் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தின் சேகிபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று அதிகாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினரும் எதிர் தாக்குதல் நடத்திய நிலையில், 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
DINASUVADU.COM