பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாரான பாஜக …!
பாஜக வேட்பாளர் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 224 தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்திற்கு அடுத்த மாதம் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்பாளர்கள் தேர்வு குறித்து டெல்லியில், பாஜக தேர்தல் குழு ஆலோசனை நடத்தியது.
பின்னர், 72 பேர் அடங்கிய முதல் வேட்பாளர்கள் வெளியிடப்பட்டது. முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா, மூத்த தலைவர் கே.எஸ். ஈஷ்வரப்பா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. காங்கிரசில் இருந்து பிரிந்து வந்த இருவருக்கு தேர்தலில் பாஜக வாய்ப்பளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.