பாஜக மீது சேற்றை வாரி வீசினால் அதிக இடங்களில் தாமரை மலரும்…பிரதமர் மோடி அதிரடி…!!
பாரதீய ஜனதா கட்சியின் மீது காங்கிரஸ் கட்சி சேற்றை வாரி வீசினால் அதிக இடங்களில் தாமரை மலரும் என பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஜோத்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியால் பா.ஜ.க.வை வெல்ல முடியாது என்று சவால் விடுத்தார். தன் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அவர், காங்கிரசுக்கு வளர்ச்சியில் நம்பிக்கையில்லை என்றும், காங்கிரஸ் கட்சி பொய்களை பரப்பி வாக்குகளை பெற நினைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.இந்து மதத்தை பற்றி பா.ஜ.க.வுக்கு எதுவும் தெரியாது என்று ராகுல் காந்தி வைத்த விமர்சனத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.பிரதமர் மோடி கூறுகையில் பா.ஜ.க. மீது காங்கிரஸ் கட்சி சேற்றை வாரி வீசினால் இன்னும் அதிக இடங்களில் தாமரை மலரும் என்று அவர் பதிலடி கொடுத்தார்.
dinasuvadu.com