பாஜக காஷ்மீரை சூறையாடிவிட்டு வெளியேறுவதா? டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ,காஷ்மீரை சூறையாடிவிட்டு , கூட்டணி அரசில் இருந்து பாஜக வெளியேறி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
காஷ்மீரில் முதல்வர் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி – பாஜக கூட்டணியில் கடும் மோதல் எழுந்த நிலையில், கூட்டணி அரசில் இருந்து வெளியேறுவதாக பாஜக இன்று அறிவித்தது. காஷ்மீரில் ஆளும் கூட்டணி அரசில் இருந்து பாஜக வெளியேறிய நிலையில், முதல்வர் மெஹபூபா முப்தி பதவி விலகினார். ஆளுநர் என்.என். வோராவை சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை அளித்தார்.
இதுகுறித்து ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘மக்களின் விருப்பத்திற்கு எதிராக காஷ்மீரில் பாஜக கூட்டணி ஆட்சியை அமைத்தது. ஆனால் தற்போது காஷ்மீரை சூறையாடிவிட்டு, கூட்டணி அரசில் இருந்து வெளியேறியுள்ளது. பணமதிப்பு நீக்கத்தால், காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழித்து விட்டதாக பிரச்சாரம் செய்ததே? பிறகு ஏன் கூட்டணியில் இருந்து வெளியேறினீர்கள்’’ என அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.