மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜியும், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவும், பாஜக – காங்கிரஸ் அல்லாத கூட்டாட்சியை மத்தியில் உருவாக்குவதே தங்களது நோக்கம் என தெரிவித்துள்ளனர்.
பாஜக – காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணியை உருவாக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜியின் முயற்சிக்கு, தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் அண்மையில் ஆதரவு தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, கொல்கத்தா சென்று மம்தா பாணர்ஜியை சந்திர சேகர ராவ் சந்தித்துப் பேசினார். ஒரு மணி நேர சந்திப்புக்குப் பின்னர் இரண்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது, மத்தியில் கூட்டாட்சியை அமைப்பதற்கான புதிய அணியை உருவாக்கும் முயற்சிக்கு, இந்த சந்திப்பு நல்ல தொடக்கமாக அமைந்திருப்பதாக மம்தா பானர்ஜி கூறினார். அரசியலில், மாற்றத்திற்கான தொடர் செயல்பாடுகள் தவிர்க்க முடியாதவை எனத் தெரிவித்த மம்தா, மத்தியில் ஒரு கட்சி மட்டுமே ஆட்சி நடத்தும் நிலை இனியும் தொடரக் கூடாது எனக் கூறினார்.
2019 மக்களவைத் தேர்தலின் போது, பாஜக – காங்கிரஸ் அல்லாத மற்றொரு அணி களத்தில் இருக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக கூறிய சந்திர சேகர ராவ், 71 ஆண்டுகளாக எந்த பயனையும் தராத தற்போதைய அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என அவர்கள் கருதுவதாகவும் தெரிவித்தார்.
இது கட்சிகளுக்கான கூட்டணியாக இல்லாமல், மக்களுக்கான அரசியலாக இருக்கும் எனவும் சந்திர சேகர ராவ் தெரிவித்தார். இந்த கூட்டமைப்பிற்கான தலைமையும் கூட்டுப்பொறுப்பைக் கொண்டதாகவே இருக்கும் என்றும் சந்திர சேகர ராவ் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…