உத்தரப்பிரதேச உன்னாவ் தொகுதி பாஜக எம்.எல்,ஏ. குல்தீப் சிங் செங்கார், 17 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் லக்னோ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நள்ளிரவில் திடீரென தமது ஆதரவாளர்கள் புடை சூழ வந்தார்.
அப்போது தம்மை சூழ்ந்துக் கொண்ட செய்தியாளர்களிடம் பேசிய அவர், தம்மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றார். தாம் தலைமறைவாகிவிடவில்லை என்பதை காட்டவே அங்கு வந்ததாகவும், நீதிமன்றத்தில் இன்று சரண் அடைய இருப்பதாக கூறி திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது செய்தியாளர்கள் மீது திடீரென செங்காரின் அடியாட்கள் தாக்குதல் நடத்தினர்.
17 வயது சிறுமியை, குல்தீப் சிங் செங்காரும் அவரது சகோதரர்களும் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை அலாகாபாத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. செங்கார் மற்றும் அவரது சகோதரர்களை கைது செய்யக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமி, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார். அப்போது கைது செய்யப்பட்ட அவரது தந்தை, காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்ததையடுத்து இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…