பாஜக ஊழலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளால்..!! தான் ஊழல்கட்சிகள் பாஜக எதிராக ஒன்று சேர்ந்துள்ளனர்- பிரதமர் நரேந்திரமோடி..!!
ஊழலுக்கு எதிராக பாஜக அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகளால், எதிர்கட்சிகள் ஒன்று சேரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, ஒடிசா மாநிலம் கட்டக்கில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு பேசிய மோடி, கடினமான முக்கியமான முடிவுகளை எடுக்க ஒரு போதும் அஞ்சியதில்லை என்றார்.
பெரிய அளவிலான ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒன்றிணைந்திருப்பதாக, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சிகள் ஒற்றிணைந்தது குறித்து அவர் விமர்சித்தார். பாஜக அரசின் 4 ஆண்டு கால ஆட்சியின் மூலம், இந்தியா மாற்றமடையும் என்று 125 கோடி மக்களுக்கும் நம்பிக்கை வந்திருப்பதாக அவர் கூறினார்.
பாஜக அரசில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் பலர் ஏழ்மையான பின்னணியை கொண்டவர்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், ஏழைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து அரசு செயல்படுகிறது என்றார். வளர்ச்சியும், நல்ல நிர்வாகமுமே சிறந்த அரசியலுக்கான விளக்கம் என்பதற்கு ஏற்ப அரசு செயல்படுவதாக மோடி குறிப்பிட்டார்.
(( கட்டாக், ஒடிசா ))
(( பா.ஜ.க அரசு பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவு
பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு ))
முன்னதாக டுவிட்டரில் கருத்து பதிவிட்ட மோடி, 2014 ஆம் ஆண்டு இதேநாளில் இந்தியாவை உருமாற்றும் பணிக்கான பயணத்தை தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த 4 ஆண்டுகளில் வளர்ச்சி என்பது துடிப்பு மக்கள் இயக்கமாக மாறியிருப்பதாகவும், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் பங்கு பெற்றிருப்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்