பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி என்பது மக்களின் உணர்வு : ராகுல் காந்தி..!
பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி என்பது எதிர்க்கட்சிகளின் உணர்வு மட்டுமல்ல, மக்களின் உணர்வும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மும்பையில் பேசிய அவர், பாஜகவுக்கு எதிரான குரல்களை ஒன்றிணைக்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து மக்களின் சுமையைக் குறைக்குமாறு கோரினால், பிரதமர் மோடி அதில் நாட்டம் காட்டவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
தங்கள் தலைமையிலான ஆட்சியில் கச்சா எண்ணெய் பேரலுக்கு 130 டாலராக இருந்ததாகவும், ஆனால், தற்போது 70 டாலராக உள்ள போதும், விலையை குறைக்காததால் வாடிக்கையாளர்கள் வழங்கும் கூடுதல் பணம் பெரும்பணக்காரர்களின் பாக்கெட்டுக்குச் செல்வதாகவும் ராகுல் கூறியுள்ளார்.