பிரதமர் நரேந்திர மோடி ஊழலே செய்யாதவர். இதேபோல உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீதும் எவ்வித ஊழல் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது. ஆனால் இதர பாஜக தலைவர்கள் அப்படி இல்லை. அவர்களுக்கு அத்தகைய உத்தரவாதத்தை அளிக்க முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாஜகவின் மூத்த தலைவர்கள் பலர் ஊழல்வாதிகளாக உள்ளனர் என்று எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார். இது அந்த கட்சி வட்டாரத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரிஜ்பூஷண் சரண் தரக்குறைவாக விமர்சனம் செய்தார். அப்போது காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.