பாஜகவில் இருந்து விலகும் முக்கிய தலைவர்கள்.
- பாஜகவின் அமைச்சர்கள் மற்றும் எம் .எல்.ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால், தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகினர்.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கான நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதிமுக கட்சியும், பாஜக கட்சியும் இந்த தேர்தலில் கூட்டணி சேர்ந்துள்ளது. இதனையடுத்து இந்த கட்சிகள் குறித்து மற்ற கட்சிகளிடம் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், அருணாசல பிரதேசத்தில் ஆட்சியில் உள்ள பாஜகவின் அமைச்சர்கள் மற்றும் எம் .எல்.ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால், அக்கட்சியிலிருந்து விலகி தேசிய மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பாஜகவிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகுவது அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.