பாஜகவின் டெல்லி கனவை நொறுக்கிய குடியரசு தலைவர்….!!!எதிர்பாராத அடி வாங்கிய பிஜேபி…!!!
டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் 27 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
பா.ஜ.க சார்பில் 27 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்க குடியரசு தலைவரை நாடியது ஆனால் இதற்கு என்ன காரணம் என்றால் தலைநகர் டெல்லி மருத்துவமனைகளோடு சேர்ந்து நோயாளிகள் நல குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 3 லட்சம் மானியம் வழங்க கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி டெல்லி முதல்வர் கேஜிரிவால் தலைமையிலான அரசு உத்தரவிட்டது.
இந்த குழுக்களுக்கு தலைவராக ஆம் ஆத்மி கட்சி உள்ள எம்.எல்.ஏக்கள் 27 பேர் பண லாப நோக்கத்தில் பதவி வகிக்கப்பதாக பா.ஜ.க சார்பில் புகார் தொடர்ந்து கூறப்பட்டது.இதனால் ஆத்திரமடைந்து பாஜகவினர் ஆம் ஆத்மி கட்சி உள்ள எம்.எல்.ஏக்கள் 27 பேரையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி, குடியரசுத் தலைவரிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.
பாஜகவின் இந்த மனுவை பரிசீலித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் பாஜகவின் டெல்லி கனவு சல்லி சல்லியாக நொறுங்கியது.
DINASUVADU