மதச்சார்பற்ற ஜனதா தளம்,காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா எம்எல்ஏக்களை கேரளாவிற்கு அழைத்துச் செல்ல வாடகைக்கு அமர்த்திய விமானங்களுக்கு விமானப் போக்குவரத்துத்துறை கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
இரவோடு இரவாக மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள் ஹைதரபாத், கொச்சிக்கும்,கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புதுச்சேரிக்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபிக்க வேண்டியுள்ள நிலையில் கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்கி விட்டது. எம்.எல்.ஏக்கள் விலை போய்விடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளமும் கொச்சிக்கு விமானத்தில் அழைத்துச் செல்ல திட்டமிட்டனர்.
ஆனால் திடீரென மூன்று தனி விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசின் விமானப்போக்குவரத்துத் துறை தெரிவித்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டு அவர்கள் பேருந்துகள் மூலம் கொச்சிக்குப் புறப்பட்டனர். திடீரென காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது .
பெங்களூரில் உள்ள ஈகிள்டன் விடுதியில் இருந்தும் ஷங்கரில்லா நட்சத்திர ஓட்டலில் இருந்தும் 58 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலத்த பாதுகாப்புடன் சொகுசுப் பேருந்துகளில் பயணித்தனர்.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்டு சென்றனர் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்கள்.இவர்கள் ஹைதராபாத்தின் பஞ்சராஹில்ஸ் பகுதியிலுள்ள தனியார் விடுதிக்கு காங். மஜத எம்.எல்.ஏக்கள் சென்றுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளம் , காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா எம்எல்ஏக்களை கேரளாவிற்கு அழைத்துச் செல்ல வாடகைக்கு அமர்த்திய விமானங்களுக்கு விமானப் போக்குவரத்துத்துறை கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
பாரதிய ஜனதாவின் குதிரை பேரத்திலிருந்து தங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாதுகாக்கும் முயற்சிக்கு விமானப் போக்குவரத்துத்துறையும் முட்டுக்கட்டைபோடுவதாக மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தியாவுக்குள் வாடகைக்கு அமர்த்தப்படும் விமானங்களை இயக்க தங்களது அனுமதி தேவையில்லை என்று விமானப் போக்குவரத்துத்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…