இரவோடு இரவாக மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள் ஹைதரபாத், கொச்சிக்கும்,கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புதுச்சேரிக்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபிக்க வேண்டியுள்ள நிலையில் கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்கி விட்டது. எம்.எல்.ஏக்கள் விலை போய்விடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளமும் கொச்சிக்கு விமானத்தில் அழைத்துச் செல்ல திட்டமிட்டனர்.
ஆனால் திடீரென மூன்று தனி விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசின் விமானப்போக்குவரத்துத் துறை தெரிவித்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டு அவர்கள் பேருந்துகள் மூலம் கொச்சிக்குப் புறப்பட்டனர். திடீரென காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரில் உள்ள ஈகிள்டன் விடுதியில் இருந்தும் ஷங்கரில்லா நட்சத்திர ஓட்டலில் இருந்தும் 58 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலத்த பாதுகாப்புடன் சொகுசுப் பேருந்துகளில் பயணித்தனர். இதே போன்று மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் கொச்சிக்கும் ஹைதராபாத்துக்கும் கார்களில் புறப்பட்டனர்.
முன்னதாக எம்.எல்.ஏக்கள் ஈகிள்டன் விடுதியில் இருந்து புறப்பட இருந்த நிலையில் மாலையில் விடுதியைச் சுற்றி போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.போலீசார் விலகியதும் பாஜகவின் தரகர்கள் விடுதிக்குள் புகுந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு பண ஆசை காட்டி வலை விரித்ததாகவும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராமலிங்க ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…