கர்நாடகத்தில் இடைதேர்தல் 5 தொகுதிகளில் நடைபெற்றது இதில் காங்கிரஸ் கூட்டணி 4 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதியையும் கைப்பற்றி காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பல்லாரி, ஷிவமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், ராமநகரா, ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய தொடர்ந்து நடைபெற்றது.ராம்நகரா சட்டப்பேரவை தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளரும் அம்மாநில முதல்வர் குமாரசாமியின் மனைவியுமான அனிதா 1 லட்சத்து 9 ஆயிரத்து 137 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.மேலும் இந்த தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் வசம் இருந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்கண்டி ((Jamkhandi)) சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.நியமகவுடா ((AS Nyamagouda)) 39 ஆயிரத்து 480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.இந்த தொகுதியும் காங்கிரஸ் வசம் இருந்த தொகுதியாகும். மற்றும் மாண்டியா மக்களவைத் தொகுதியில், மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் சிவராமகவுடா தன்னுடைய பங்கிற்கு 3 லட்சத்து 24 ஆயிரத்து 943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தொகுதியை அதாவது ஷிவமோகா மக்களவை தொகுதியில், பாஜக வேட்பாளரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவின் மகனுமான பி.ஒய்.ராகவேந்திரா 52 ஆயிரத்து 148 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இந்த தொகுதியை பாஜக தக்கவைத்து கொண்டது.1999 ஆண்டுக்கு பிறகு கர்நாடகவில் பாஜகவின் கோட்டையாக கருதப்படும் பல்லாரி தொகுதியை இழந்துள்ளது.இந்த பல்லாரி தொகுதியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வி.எஸ்.உக்கிரப்பா அத்தொகுதியில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 161 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
மொத்தம் 5 தொகுதிகளில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா கூட்டணி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.இந்த வெற்றியை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றி தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமி காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியின் வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் இந்த வெற்றியை பதிவு செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி அரசின் நிர்வாகத்திறன் ஆகியவற்றைப் பார்த்தே இங்கே மக்கள் வாக்களிக்கின்றனர் ராமர்கோவில் போன்ற விவகாரங்களை அரசியலாக்குவது போன்றவைகள் இங்கு எடுபடாது என்றும் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
DINASUVADU