பாகுபாடு கூடாது..!பாகுபாடு பார்த்தால் 2 ஆண்டு சிறை..!1 லட்சம் அபராதம்..!
ஹெச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு பார்ப்போருக்கு தண்டனையளிக்கும் சட்டம் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்திருப்பதாக, மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை தர மறுப்பதும், நிறுவனங்களில் பணியில் இருந்து நீக்குவதும் குற்றம் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி சட்டம் இயற்றப்பட்டது.
அதன்படி, பால்வினை நோய் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவருக்கும், அவர்களை உதாசீனப்படுத்துவோருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டம் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
DINASUVADU