பாகிஸ்தான் சிறைகளில் தவிக்கும் 457 இந்தியர்கள் – அதிர்ச்சி தரும் தகவல் இதோ
பாகிஸ்தான் சிறைகளில் 399 மீனவர்கள் உட்பட 457 இந்தியர்கள் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த 2008-ஆம் ஆண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளும் தங்கள் நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் மற்றொரு நாட்டு கைதிகளின் பட்டியலை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம்.இதன்படி, ஆண்டுதோறும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் இரு நாடுகளுக்கு இடையே இந்தப் பட்டியல் பரிமாறப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் அரசு சார்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு இந்தப் பட்டியல் நேற்று அனுப்பப்பட்டது. அதில், அந்நாட்டு சிறைகளில் 399 மீனவர்கள் உட்பட 457 இந்தியர்கள் அடைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.அவர்கள் அனைவரையும் 8-ஆம் தேதி விடுதலை செய்யவுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.