காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் பாகிஸ்தான், ஐஎஸ் கொடிகளை உயர்த்தி முழக்கமிட்டதுடன் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காஷ்மீரின் ஸ்ரீநகரில் ரம்சான் பெருநாளையொட்டி மசூதிகளில் தொழுகை நடத்திய இளைஞர்களில் சிலர் பாகிஸ்தான் கொடிகளையும், ஐஎஸ் கொடிகளையும் உயர்த்திப் பிடித்து இந்தியாவுக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் அங்கு விரைந்து வந்ததையடுத்து அவர்கள் மீது இளைஞர்கள் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர்.
இதனால் வன்முறையைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வெடிக்கச் செய்தும் தடியடி நடத்தியும் அவர்களை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம்போலக் காட்சியளித்தது.
ஏற்கெனவே ஸ்ரீநகரின் லால்சவுக்கில் செய்தியாளர் சுஜாத் புகாரி சுட்டுக்கொல்லப்பட்டார். அதிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் 3 இளைஞர்கள் காவலர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காவலர் ஒருவரும் பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்தனர்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…