பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுப்பது குறித்து தீவிர ஆலோசனை !
இந்திய ராணுவம் ,எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில், அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவத்தினராலும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளாலும் தொடர்ந்து நீடிக்கும் பதற்றத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான,ஆலோசனையை தீவிரப்படுத்தியிருக்கிறது.
ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவட் (Bipin Rawat) தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், ராணுவத்தின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றிருக்கின்றனர். எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளின் ஊருடுவலை முறியடிப்பது பற்றியும், சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பை தடுப்பது பற்றியும் முக்கிய ஆலோசனை நடைபெறுவதாக, ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, அடிக்கடி இந்திய துருப்புகள் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு, தக்க பாடம் புகட்டுவது பற்றியும் தீவிர ஆலோசனை நடைபெறுவதாக அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.