பாகிஸ்தானில் வாழ்ந்த இயேசுவும், மரியாளும்..!
இயேசு கிறிஸ்து சிலுவையில் இறக்கவில்லை என்று இன்றும் பலர் நம்புகின்றனர். இயேசு தனது கடைசிக் காலத்தில் காஷ்மீரில் வாழ்ந்ததாக அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்.
பாலஸ்தீனத்தில் இருந்து தப்பியோடிய இயேசு, அவரது தாயார் மரியாளுடன் (இன்றைய) பாகிஸ்தானை வந்தடைந்தார். அங்கு சில காலம் வாழ்ந்திருக்கையில் மரியாள் மரணமுற்றார். பாகிஸ்தானில் இப்போதும் முரே (அல்லது மரீ?) என்ற பெயரில் கிராமம் ஒன்றுள்ளது. அங்கு மரியாள் புதைக்கப் பட்டதாக சொல்லப் படும் சமாதி ஒன்றுள்ளது. அதில் “அன்னை மரியாள் துயிலுமிடம்” என்று எழுதப் பட்டுள்ளது.
இயேசு கிறிஸ்து தொடர்ந்து பயணம் செய்து காஷ்மீரை சென்றடைந்தார். அங்கு தனது 82 வது வயது வரை பிரசங்கம் செய்து, காஷ்மீரிலேயே காலமானார். இந்தியக் காஷ்மீரில், பழைய சிறி நகர் பகுதியில் உள்ள கனியார் எனும் இடத்தில் இயேசுவின் சமாதி உள்ளது. அதை இன்றைக்கும் பார்க்கலாம்.
(படத்தில்: காஷ்மீர்/பாகிஸ்தானில் புழக்கத்தில் உள்ள இயேசு ஓவியம். அதில் இந்திய பாணி ஆடை அலங்காரங்களுடன் இருப்பதை கவனிக்கலாம்.)