பள்ளிகளையும் காவிகளாக மாற்றும் உ.பி பாஜக அரசு
உத்திரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் பதவி வகித்த பின்பு அரசு கட்டிடங்கள் பெரும்பாலும் காவி வண்ணத்திலேயே காட்சியளிக்கின்றன. இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது போதாதென்று, தற்போது அரசு பள்ளிகளுக்கும் காவி வண்ணம் பூசி மேலும் இந்து மதவாத சர்ச்சைக்கு வலு சேர்த்துள்ளது பாஜக அரசு.
இந்த காவி வண்ணம் பூசப்பட்ட பள்ளிகள், உத்திரபிரதேச மாநிலத்தில் பிலிபட் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள 100 துவக்க பள்ளிகளுக்கு காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தையும் மீறி கிராம தலைவர்கள் காவி நிற வர்ணத்தை பூசியதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.