பல மாநிலங்களில் தொடரும் பணத்தட்டுப்பாடு!வெறிச்சோடிய ஏ.டி.எம்.கள்!
மும்பையிலும் தெலுங்கானா, ஆந்திராவைத் தொடர்ந்து பெரும்பாலான ஏ.டி.எம்.களில் கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா, ஆந்திராவில் கடந்த ஒரு வாரமாக ஏ.டி.எம்.களில் நிலவி வந்த பணத் தட்டுப்பாடு, தற்போது கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணம் இல்லை என்றும், எந்திரம் இயங்கவில்லை என்றும் அறிவிப்பு பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இதனிடையே, மராட்டியத்தில் மும்பை உள்பட பல்வேறு இடங்களில் பணம் இருக்கும் ஒரு சில ஏ.டி.எம்.களில் பொதுமக்கள் நீண்டவரிசையில் நிற்கின்றனர்.
இதனால் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும், தங்களக்கு தேவையான பணத்தை எடுக்க பல ஏ.டி.எம்.களுக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னர் எந்த அளவுக்கு இந்ததோ, அதே அளவுக்குத்தான் தற்போதும் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.