ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக தெலுங்கு தேசம் அறிவித்திருப்பதற்கு, பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருப்பதாக கூறினார்.
தெலுங்கு தேசம் மீது நம்பிக்கை வைத்து தேசிய அளவில் பல்வேறு கட்சிகள் இருக்கின்றன. பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகிய சில மணி நேரத்தில் பல்வேறு கட்சிகள் தெலுங்கு தேசத்தை தொடர்பு கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர ஆதரவு தெரிவித்தன.
மத்திய அரசுக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது எந்த கட்சிக்கும் நம்பிக்கை கிடையாது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நாடகம் ஆடுவதை மற்ற கட்சிகளின் தலைவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
ஆந்திராவுக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று ஜனசேனா கட்சியின் தலைவர் நடிகர் பவன் கல்யாண் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பாமல் என்னை ஏன் விமர்சித்து வருகிறார் என்று தெரியவில்லை. இந்த பிரச்சினையை நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆந்திராவுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
இந்த நாடே இப்போது தெலுங்கு தேசம் கட்சியையும், என்னையும் பார்த்துக் கொண்டு இருக்கிறது. 6 எம்.பி.க்கள் கொண்ட தெலுங்கு தேசம் குழுவினர் டெல்லியில் தங்கி இருந்து பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் பேசி நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…