பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்கட்சிகள் முழக்கம் -மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு…!!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்கட்சிகளும், ராகுலை கண்டித்து பாஜக எம்.பி.க்களும் முழக்கம் எழுப்பியதால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11-ம் தேதி துவங்கியது. அடுத்த மாதம் 8-ம் தேதிவரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பாஜகவின் கடைசி கூட்டத்தொடரான இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை சட்டமாக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
மேகதாது அணை விவகாரத்தை அதிமுக எம்.பி.க்களும், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திர எம்.பி.க்களும் வலியுறுத்தி வருகின்றனர்.இதையடுத்து மக்களவையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். பின்னர் அவை மீண்டும் துவங்கிய போது எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.