பரபரப்பு..!நாடு முழுவதும் பாரத்பந்த்…!அடித்து நொறுக்கப்பட்டபெட்ரோல் பங்க்… !

Default Image

மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பங்க்  அடித்து நொறுக்கப்பட்ட்டுள்ளது.

இன்று (செப்டம்பர் 10 ஆம் தேதி) நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது.

இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பும் விடுத்தார்.

அதேபோல் மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.

அதேபோல் சிஐடியு சங்க ஓருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியம் கூறுகையில், பள்ளிகளுக்கு செல்லும் ஆட்டோக்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடாது என தெரிவித்தார்.மேலும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி, இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 75 ஆயிரம் மணல் லாரிகள் இயங்காது என தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் நடைபெறும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.அனால்   ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கல்வீச்சு, பஸ் உடைப்பு போன்ற சம்பவங்களும் நடந்து வருகிறது. மேலும், அத்துமீறி சாலை மறியலில் ஈடுபடும் போராட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில்  மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கை போராட்டக்காரர்கள் சிலர் உடைத்துள்ளனர்.அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்