பரபரப்பான சூழ்நிலையில்..! குடியரசு தலைவரின் உரையுடன் ஜனவரி 31-ல் தொடங்குகிறது- நாடாளுமன்றத்தின் முதற் கூட்டத்தொடர்..!
- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது.
- முதற்கட்ட கூட்டத்தொடர் ஜன.,31- பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் பரப்பரப்பான சூழ்நிலைக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த கூட்டத்தொடரில் 2020-2021-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1ம்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.ஜனவரி 31ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற முதற்கட்ட கூட்டத்தொடர் ஆனது பிப்ரவரி 11ம் தேதி வரைக்கும் நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜனவரி 31ல் நடைபெறுகின்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார்.குடியரசு தலைவரின் உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தொடரானது பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் கூட்டத்தொடரின் 2வது பகுதியாக மார்ச் மாதம் 2ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் அவ்வாறு கூடும் கூட்டத்தொடர் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறும் என்று உத்தேசமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.