பயப்படவேண்டாம் ..! வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தல்…!
வருமான வரித்துறை,மார்ச் 31ம் தேதிக்குள் அச்சப்படாமல் வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
வரி செலுத்துவோர் மீது நம்பிக்கை உள்ளதாகவும் அனாவசியமாக யாரையும் தொந்தரவு செய்யும் நோக்கம் இல்லை என்றும் வருமான வரி அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். பெரும் தொகையை வங்கிகளில் முதலீடு செய்திருந்தால் அதனைத் தவறாமல் வருமான வரி படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டாலும் தவறான தகவல்களுடன் தாக்கல் செய்தாலும் தண்டனை மற்றும் அபராதத்தை சந்திக்க நேரிடும் என்றும் வருமான வரித்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.