பயங்கரவாதம் என்ற வார்த்தையை நீக்காவிட்டால் சி.ஐ.ஏ.வுக்கு எதிராக உலக அளவில் போராட்டம்!வி.ஹெச்.பி எச்சரிக்கை

Default Image

பயங்கரவாதம் என்ற வார்த்தையை நீக்காவிட்டால் சி.ஐ.ஏ.வுக்கு எதிராக உலக அளவில் போராட்டம் நடைபெறும் என்று வி.ஹெச்.பி தெரிவித்துள்ளது.

விஎச்பி அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சிஐஏவின் குற்றச்சாட்டு பொய்யானது, ஆதாரமற்றது. ஒசாமா பின்லேடனை உருவாக்கியதே சிஐஏ தான். சிஐஏ வரைபடத்தில் காஷ்மீரின் குறிப்பிட்ட பகுதி இந்தியாவை சேராதது என குறிப்பிட்டுள்ளது. இது சிஐஏ.வின் இந்தியாவுக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது. விஎச்பி.யை மத தீவிரவாத அமைப்பு என கூறியதற்கு, சிஐஏ மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அதற்கு எதிராக விஎச்பி போராட்டம் நடத்தும். இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னதாக  அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ ,விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகியவற்றை மத தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்த்தது.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தேசியவாத அமைப்பாகவும் சிஐஏ அடையாளப்படுத்தி உள்ளது. சர்வதேச அளவிலான தீவிரவாத மற்றும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள அமெரிக்க உளவு அமைப்பு, இந்தியாவில் செயல்படும் ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகியவற்றை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய இயக்கங்கள் பட்டியலிலும் சேர்த்துள்ளது.

ஹூரியத் இயக்கத்தை பிரிவினைவாத அமைப்பாகவும், மதானி தலைமையிலான ஜமியாத் உலமா ஹிந்த் ( Jamiat Ulema-Hind) அமைப்பை மத தீவிரவாத அமைப்பாகவும் சிஐஏ பட்டியலிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்