பத்மாவத் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள்!முன்னணி நடிகர் காட்டம் ….

Default Image
பத்மாவத் திரைபடத்திற்கு ஒரு சில பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திரைத்துறையினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த படத்திற்கு ஆதரவாக நடிகர் அரவிந்த்சாமி தனது வலுவான கண்டனத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் .
Image result for aravind swamy
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகியவுள்ள திரைப்படம் ‘பத்மாவத்’. இத்திரைப்படத்துக்கு குஜராத், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து தடை விதித்தனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தடையை விலக்கி உத்தரவிட்டது.
Related image
ஆனால், குஜராத்திலும், ஹரியாணாவிலும் பத்மாவத் திரைப்படத்துக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்கள் தொடர்ந்து நடந்தேறி வருகின்றன. இந்நிலையில், நடிகர் அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள். ஒன்று நாட்டு மக்களுக்கும் அவர்கள் உடைமைகளுக்கும் பாதுகாப்பு தாருங்கள்.உங்களால் முடியவில்லையென்றால் அதற்கு எந்த சாக்குபோக்கும் சொல்லாதீர்கள். உங்கள் நிர்வாக சீர்கேட்டைத்தவிர இங்கே குறை சொல்வதற்கு வேறொன்றும் இல்லை” எனப் பதிவிட்டுள்ளார்.
Image result for deepika padukone saree hot
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்