பதவி விலகும் “பரீக்கர்”பரிதவிக்கும் “பாஜக”..!! அடுத்த டார்கெட் யார்..??
தனது உடல்நிலை காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய பரீக்கர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பரீகர், மீண்டும் உடல்நிலை பாதிப்பு காரணமாக கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.
பரீக்கர் உடல்நலம் கருதியும் தற்போதைய நிலையில் அவரால் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க முடியாத சூழ்நிலை நிலைவுவதால் அவருக்கு பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய பா.ஜ.மேலிடம் முடிவுசெய்துள்ளதாகவும் இது தொடர்பாக மத்திய குழுவினர் கோவா வந்துள்ளதாகவும், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்தநிலையில், தனது உடல்நிலை காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய பரீக்கர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான தனது பதவி விலகல் கடிதத்தை கட்சி மேலிடத்திற்கு அளிப்பதற்காக பரீக்கர் டில்லி செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், மேல் சிகிச்சைக்காக மட்டுமே பரீக்கர் டில்லி செல்ல உள்ளதாகவும் மற்றொரு தகவலும் கூறப்படுகிறது.அப்படி பதவி பரீக்கர் விலகும் பட்சத்தில் கோவாவின் அடுத்த முதல்வர் யாரென்று பாஜக பலத்த அலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU