பதவி போனதில் எனக்கு அதிர்ச்சி இல்லை : மெகபூபா முப்தி..!

Default Image
ஜம்மு காஷ்மீரில் பிடிபி – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், இன்று கூட்டணியில் இருந்து வெளியேவதாக பாஜக அறிவித்தது. இதனால், பிடிபி கட்சி தலைவர் மற்றும் முதல்வராக இருந்த மெகபூபா முப்தி தனது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பினார்.
ராஜினாமா செய்த பின்னர் பத்திரிக்கையாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாஜக கூட்டணியை முறித்ததிலும், முதல்வர் பதவி பறிபோனதிலும் எனக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. ஏனென்றால், அதிகாரத்திற்காக இந்த கூட்டணி அமைக்கவில்லை. மிகப்பெரிய கனவை செயல்படுத்தவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டது. இருதரப்பு போர்நிறுத்தம், மோடியின் பாகிஸ்தான் பயணம், 11 ஆயிரம் இளைஞர்கள் மீதான வழக்குகள் வாபஸ் ஆகியவை நடந்துள்ளது.
எனது ராஜினாமா கடித்தத்தை கவர்னரிடம் சமர்பித்தேன். மேலும், எந்த கூட்டணிக்கும் முயற்சிக்கவில்லை எனவும் அவரிடம் தெரிவித்தேன். காஷ்மீர் மீதான பாதுகாப்பு கொள்கை மாற்றப்பட வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்