பணமதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு – பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட்
2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்டது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற நடவடிக்கையால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அசின் பிரேம்ஜி என்ற பல்கலைக்கழகம் நடத்திய, ” ஸ்டேட் ஆப் வொர்கிங் இந்தியா” என்ற வேலை வாய்ப்பு குறித்த ஆய்வில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு நாட்டில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வேலை இழப்பில், கிராம புறங்களில் உள்ள 20 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தான் அதிகம் பாதிக்கபட்டுள்ளதாக அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.