நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பட்டாசுகளைத் தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும் இதுதொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்தது.
மேலும் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் இதனை பின்பற்றாத நிறுவனங்கள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என்ற எச்சரிக்கையும் விடுத்தது.தீபாவளிக்கு இரண்டு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதித்தது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி தீபாவளிக்கு இரண்டு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு மொகலாயர் ஆட்சிக் காலத்தில் கூட இருந்ததில்லை என்று பாஜக விமர்சித்துள்ளது.
பாஜக மக்களவை உறுப்பினரான சிந்தாமணி மாளவியா பட்டாசு விவகாரத்தில் குறித்து அளித்த பேட்டியில் தீபாவளி பூஜை எப்போது நடைபெறும் நேரத்தை நீதிமன்றத்தால் நிர்ணயிக்க முடியாது பூஜை நேரத்தில்தான் பட்டாசு வெடிப்பார்கள் என்ற வழக்கத்தைகூட நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை விட வழக்கத்தைப் பின்பற்றுவதையே தாம் விரும்புவதாகவும் நிதிமன்ற தெரிவித்தார்.
DINASUVADU
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…