பஞ்சு ஆலையில் தீ விபத்து..!
உத்தரப்பிரதேசத்தில் பஞ்சு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
Hapur மாவட்டத்தில் உள்ள தவுலானா பகுதியில் மெத்தை மற்றும் தலையணை தயாரிக்கப் பயன்படும் பஞ்சு ஆலை செயல்பட்டு வருகிறது. அங்கு மின்கசிவின் காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து, தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
ஆனால், தீயணைப்புத்துறையினர் தாமதமாக வந்ததால், ஆலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசமாயின. சுமார் 2 மணி நேரத்துக்குப் பின் வந்த தீயணைப்புத்துறையினர், போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.